Wednesday, December 19, 2012

டூயட்

முன்குறிப்பு:
இதற்கு தகுந்த ஓவியமோ புகைப்படமோ இன்னும் அமையவில்லை :) 

ஆண்:
ஆவணி மாச சாரல் காற்றே என்
அத்தை பெத்த சின்ன முத்தே
ஆளுக்கொரு தூணா சாஞ்சு நிக்கவா
ஆளில்லா வீட்டுக்கு உன்னை வரச் சொன்னேன்.
பெண்:
சித்திரை மாச தங்கக்கட்டி என்
மாமன் பெத்த சிங்கக் குட்டி
தூணப் புடிச்சு சாஞ்சு நின்னவ
தானா வந்தா உன்னை கட்டிப்புடிப்பேன்.
ஆண்:
மதியம் செஞ்ச மீன் குழம்பு ருசிக்கவா
அந்தி சாஞ்சு அரை மணி கழிச்சு
திண்ணையில குத்தவெச்ச.

பெண்:
மதியம் செஞ்ச மீன் குழம்பு ருசிச்சவ
ஊட்டி விடச் சொன்னா
ஓடியா போயிருப்பேன்.

ஆண்:
பரண்மேல் கிடந்த படுக்கையை கடத்தி
தனியா படுத்து உறங்கவா
இத்தனை நாள் தவம் கிடந்தேன்.

பெண்:
படுக்கையை கடத்தி தனியா படுத்து கிடந்தே
மார்மீது சாயச் சொன்னா
மாட்டேன்னா சொல்லியிருப்பேன்.

ஆண்:
கட்டுக்கோப்பா மாமன்  கிடக்க
கழட்டிவிட்ட கண்ணுக்குட்டி போல
கண்டுங்காணாம திரியரையே
பெண்:
ஆறேழு வருஷம் முன்ன நடந்த
ஓடிபுடிச்சு விளையாண்ட கதைய
இப்படி செஞ்சும் உனக்கு புரியலையே.

ஆண்:
பாதி சாமம் ஆன பின்னே
ஊர் உறங்கி போன பின்னே
பாவிப் பையன் என்னை பாத்து
கைகொட்டி சிரிக்கிறியே
பெண்:
மீதி சாமம் உறங்காம
உன்யேவலுக்கு காத்துக் கிடக்கேன்
உரக்கச் சிரித்தும் உனக்கு உரைக்கலையே
செவத்த தோலு மச்சானே.

ஆண்:
ஏண்டி என்னை நோகடிச்சு
ஒரு இராத்திரி வீணடிச்சு
எந்த மலையை கரைக்கப் போற
எப்போ வந்து என்மேல சாயப் போற.
பெண்:
இந்த சொல்லுக்கே ஒரு
இராத்திரி கடத்திட்டியே
மொத்த சொல்லையும் கொட்டிடாதே
மத்த இராத்திரி வீணாயிடும்.

No comments:

Post a Comment