தன்னிலை துறந்து
சிரம் தாழ்த்தி
கரம் நீட்டி
வாழ்பவர் பிச்சைகாரர்.
கோடிகளில் கொள்ளை
மாளிகையில் வாழ்க்கை
பதவி மந்திரி
நபர் ஒருவரல்ல
பெயர் ஒன்றல்ல
ஏராளம்.
பாரதத்தில் மட்டும்
பிச்சைகாரர்கள் இருவகை.
Tuesday, December 14, 2010
Monday, December 13, 2010
மனிதம்
Wednesday, December 8, 2010
புதிதாய் ஒரு பயணம் மேற்கொள்கிறாய்
என்ன சொல்லி வழியனுப்புவது??
அதிகமாய் சொன்னால் அலுத்துவிடும்
குறைவாக சொன்னால் கசந்துவிடும்
முன்னும் பின்னும் இணைத்துச்
சொன்னால் நன்றாகவே இருக்கும்.
முன்
உன் விமர்சனமும் என் விமர்சனமும் வேறுபடும்
கருத்துகளில் வேற்றுமை காண்போம்
அருகிலே அமைதியாய் இருந்து அவரவர் வேலை செய்வோம்
உனக்கு பிடித்தவைகளை நீயும்; எனக்கு பிடித்தவைகளை நானும்;
கண்படும் என்று சில நாள் பிரிந்திருப்போம்;
உபயோகித்த பொருட்களுக்கு நன்றிகள் உரைக்கிறோம்;
பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்கிறபோது பகிர்ந்த உறைவிடம்,
ஒன்றாகதான் திரிந்தோம்; திரிகிறோம்;
நான் சிக்கனம்; நீ அதிகம்;
செலவிலும்; பேச்சிலும்;
இருந்தும் வேறுபடுகிறோம்;
என்னமோ போடா.
எதுவும் செய்யாமல் முப்பதுகளை நெருங்கிவிட்டோம்
இருந்தும் துளிர்த்தே இருக்கிறதே
அது எப்படி?
பின்:
நேற்று என் கல்யாணம்; அதற்கு சிலநாட்கள் முன் உனது
வாழ்த்துகள் பரிமாறி கை குலுக்கிறோம்
பிள்ளைகள் பெற்றதன் முதிர்ச்சி மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறோம்
வாழ்த்துகள் பரிமாறி கை குலுக்கிறோம்
பிள்ளைகள் பெற்றதன் முதிர்ச்சி மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறோம்
இன்பச் சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் செல்கிறோம்
வெவ்வேறு துறைகளில் முன்னேற்றம் காண்கிறோம்
சீர் கொண்ட எண்ணம்; சிறப்புமிக்க வாழ்க்கை
இருந்தும் வேறுபடுகிறோம்;
அருபதுகளின் தொடக்கத்தில் நமது எல்லா வேற்றுமைகளையும்
கண்டு புன்னகைக்கிறோம்
என்னமோ போடா.
எதுவும் செய்யாமல் என்பது வரையில் வாழ்ந்துவிட்டோம்
இருந்தும் துளிர்த்தே இருக்கிறதே
அது எப்படி?
எதாவது செய்துதான் சேர்ந்திருக்க முடியுமா?
எதாவது செய்துவிட்டு பிரிந்திருக்க முடியுமா?
என்றும் மாறா இப்பூங்காவின் பசுமை போல்
ஈரப்பதம் நம் வேர் வரையில் உள்ளது.
பயணத்தை தொடர்வாய்.
நாம்
தொடர்வோம்
நாமாகவே.
Subscribe to:
Posts (Atom)
