இளைஞா எழுவாய் இமயம் தொடுவாயென
கனவை செதுக்கிய சிற்பியும் நீயே
வலியா பசியா யாவும் மறந்து
ஊக்கம் தந்த விதையும் நீயே
தமிழா மரபா கேள்விகள் தவிர்த்து
அறிவை பகிர்ந்த அறிஞன் நீயே
யாதும் ஊரே என உலகம் பார்க்கையில்
உறக்க சொன்ன முதல் குடிமகன் நீயே
கனவை காண் கேள்விகள் கேள்
செயலை செய் எதுவும் முடியும்
இதுவே மந்திரம் என்று உணர்த்திய
குருவும் நீயே.
ஒரு நாள் விடியும் கனவும் கூடும்
பாரதம் வையத் தலைமை கொண்டோம்
என்று முழங்கும் கீதம் ஒன்று
விண்ணில் வந்து உன்பாதம் தொடும்.
இறவா புகழும் இறைவன் வரமும்
ஒன்றாய் பெற்ற திரு.கலாமிற்கு ஒரு சலாம்
கனவை செதுக்கிய சிற்பியும் நீயே
வலியா பசியா யாவும் மறந்து
ஊக்கம் தந்த விதையும் நீயே
தமிழா மரபா கேள்விகள் தவிர்த்து
அறிவை பகிர்ந்த அறிஞன் நீயே
யாதும் ஊரே என உலகம் பார்க்கையில்
உறக்க சொன்ன முதல் குடிமகன் நீயே
கனவை காண் கேள்விகள் கேள்
செயலை செய் எதுவும் முடியும்
இதுவே மந்திரம் என்று உணர்த்திய
குருவும் நீயே.
ஒரு நாள் விடியும் கனவும் கூடும்
பாரதம் வையத் தலைமை கொண்டோம்
என்று முழங்கும் கீதம் ஒன்று
விண்ணில் வந்து உன்பாதம் தொடும்.
இறவா புகழும் இறைவன் வரமும்
ஒன்றாய் பெற்ற திரு.கலாமிற்கு ஒரு சலாம்
