தேகம் சிலிர்க்கும் ஓர் குளிரிரவில்
தூரத்து வெளிச்சத்தில்,
இருவர் நடக்கும் இடைவெளியில்
இருவரும் நடந்தோம்.
சொல்கிறாயா?
ம். சொல்கிறேன்.
ஏங்கி தவித்து எழுதுகோள் பிடித்து எழுதுவேன்
அவன் பெயரை.
ஆனால் சொல்ல தெரியாது.
கருப்பு வெள்ளை வண்ணநிறத்தில் ஓவியம் வரைவேன்
அவன் முகத்தை.
ஏன் என்று தெரியாது.
ஊண்உடல் வருத்தி உண்ணும் உணவை தவிர்ப்பேன்
அவனுக்காக.
எதற்கென்று தெரியாது.
யாருமற்ற நேரத்தில் தேம்பி தேம்பி அழுவேன்
அவன் வருகைக்காக.
என்றுவருவான் தெரியாது.
அவன்நினைவு நேற்றா? இன்றா? நாளையா? நானறியேன்?
இல்லை என்றுமா?
நானறியேன்?
அந்த பிஞ்சு கரங்கள்,
சேலை பிடித்து இழுத்தும்,
அம்மா என்றழைத்தும்
வந்துவிட்டேன்.
என் செய்வேன்?
என் செய்வேன்?
சிதறியது நீர்த்துளிகள்,
இருவருக்கும்.
அடி பைத்தியகாரி.
தேவை உனக்கல்ல. நமக்கு.
புதிதாய் உயிர்பிப்போம்.
பெற்றவர் நாமென்று,
பெயர் சூட்டு விழாவிற்கு
அனைவரையும் அழைப்போம்.
இருள் விலகி இருவருக்கும்
இடைவெளி குறைந்தது.
Sunday, June 20, 2010
Thursday, June 17, 2010
முகமூடி
தெரிந்தவை சில. தெரியாதவை சில.
உலகில் ஒவ்வொன்றுக்கும்
ஓர் பெயர் உண்டு.
பெயரில்லாமல் ஏதேனும் உண்டா?
ஓடும் வரை நதி.
ஓய்ந்தேயிருந்தால் அதற்கு
ஒன்றா இல்லை பல உருவமா?
முப்பது நாளில் மோகம்
அறுபது நாளில் ஆசை
தேவை எண்ணிக்கையில் அன்பா?
இல்லை எண்ணிக்கையில்லா அன்பா?
ஏந்தி கேட்கும் கைகளும்
அள்ளி தரும் கைகளும்
ஒரே இடத்தில் உண்டு.
இதை தெய்வம் என்பதா?
இல்லை மனிதம் என்பதா?
இப்படி, தெரிந்தவை சில. தெரியாதவை சில.
இருந்தும் நமக்கு,
ஒரு இடத்தில் எல்லாம் தெரிந்தது போல் ஓர் முகமூடி.
மறு இடத்தில் ஏதும் தெரியாதது போல் ஓர் முகமூடி.
முகமூடி.
இந்த அணிகலனை களைய என் செய்வோம்?
உலகில் ஒவ்வொன்றுக்கும்
ஓர் பெயர் உண்டு.
பெயரில்லாமல் ஏதேனும் உண்டா?
ஓடும் வரை நதி.
ஓய்ந்தேயிருந்தால் அதற்கு
ஒன்றா இல்லை பல உருவமா?
முப்பது நாளில் மோகம்
அறுபது நாளில் ஆசை
தேவை எண்ணிக்கையில் அன்பா?
இல்லை எண்ணிக்கையில்லா அன்பா?
ஏந்தி கேட்கும் கைகளும்
அள்ளி தரும் கைகளும்
ஒரே இடத்தில் உண்டு.
இதை தெய்வம் என்பதா?
இல்லை மனிதம் என்பதா?
இப்படி, தெரிந்தவை சில. தெரியாதவை சில.
இருந்தும் நமக்கு,
ஒரு இடத்தில் எல்லாம் தெரிந்தது போல் ஓர் முகமூடி.
மறு இடத்தில் ஏதும் தெரியாதது போல் ஓர் முகமூடி.
முகமூடி.
இந்த அணிகலனை களைய என் செய்வோம்?
Subscribe to:
Posts (Atom)
