Tuesday, September 28, 2010

மழைக்கு முகம் கொடு


ஆளில்லா ஆற்றுப்படுகை - ஆனால்
அக்கரையில் நீ நின்றாய்.
ஆளில்லா இரயில்பெட்டி - என்னசெய்து
என்னை நீ தவறவிட்டாய்.

எச்சில் படாத முக்கனியின் முதற்கனி
பச்சை புடவை போர்த்திய பூமி
கணவனை இழந்த வெண்ணிற வானம்
பன்னீர் காற்றால் சிலிர்த்த தேகம்
யாவும் சுகிக்கவில்லையடி கண்ணம்மா
நீ வார்த்தை தவறிவிட்டாய்
சிவந்த முகத்தில் கலவரம் வெடிக்குதடி
கண்ணீர் தெரிக்குதடி.

என் செய்வேன்?

மழைக்கு முகம் கொடு
கண்ணீர் கரையும்.
பெண்மை கரையாது.