Sunday, June 30, 2013

என்னை மீட்டுயெடு...

Taken By: Ashok
Flickr Profile: http://www.flickr.com/people/aa_photographe/
Flickr Photo: http://www.flickr.com/photos/aa_photographe/7858540852/





























சாலையோர தேநீர் சுவைத்து குடித்து
இறுக்கி அணைத்துக்கொண்ட
நெடுதூர பயணத்தின் நடுவினிலே
கருமேகங்கள் சூழ்ந்து
அடாது பெய்கிறது பேய்மழை...

மரங்கள் சூழ்ந்த பூங்கா
மலர்கள் நிறைந்த புல்வெழியின் நடுவினிலே
நீயும் நானும்
விரல்களால் கோலமிடுகையில்
தட தடவென  பெய்கிறது மழை...

அஸ்தமன வேளையிலே
கடற்கரைதனில் கால்கள் நெனைக்கிறோம்
மணல் மேட்டில் அமர்ந்து
மாறி மாறி உலரிக்கொண்டிருந்த தருணம்
பட படவென பெய்கிறது மழை...

நிலா உலாவும் வானம்
யாருமற்ற மொட்டைமாடி
ஒரே போர்வைக்குள் நாமிருவர்
கதைகள் கதைத்துக்கொண்டிருந்த தருணம்
சட சடவென பெய்கிறது மழை...

உன் நினைவுகளில் மூழ்கிய என்னை
அடியோடு கரைக்க மழை
போராடிக் கொண்டிருக்கிறது.

தொலைபேசி உரையாடலோ அல்லது
குறுஞ்செய்தியோ,  மின்னஞ்சலோ
ஏதேனும் ஒன்றை அனுப்பி
என்னை மீட்டுயெடு தங்கமே...

Thursday, June 20, 2013

யாதுமாகிறாய்..

அனந்த விகடனில்  30-05-2012 வெளியான  சிறுகதை "விரும்பிக் கேட்டவள்"  கதைக்கான  ஓவியம்.
வரைந்தவர். திரு. இளையராஜா.
தொலையாமல் இருக்க புகைப்படம் பிடித்தவர்
நண்பர்: அருண்  வேலுசாமி 


நெற்றி சுரிக்கையில் சந்தன பிறை விழுந்திடுமோ 
கண் சிமிட்டும் பேரழகில் தாளங்கள் தப்பிடுமோ
தவழ்ந்து வரும் நடையினில்  கப்பல் கவிழ்ந்திடுமோ - இனி
நீ விழிக்கும் நேரத்தில் வெண்ணிலா உதித்திடுமோ.

சின்னச் சின்ன பருக்களினால் உன் கன்னம் சிவந்திடுமோ
நிலவினிலே கரையென்று உலகமே பாடிடுமோ
உன் ரீங்காரம் கேட்ட பின் குயில் பாட்டை நிறுத்திடுமோ
உன் அழகை ஆராய்வதில் என் பொழுதும் கரைந்திடுமோ

செல்ல சிரிப்பலையில் தொடர்ந்தெழும் சிணுங்கல்களில்
வண்ண வளையல்கள் தாளமிட்டு விளையாடும்
காதோர தோடு கன்னமுரசி விளையாடும்
விரல்களில் மோதிரம் தங்காமல் விழுந்தெழும்.

கூந்தலிலே பூ முடித்து புடவை கட்டும் பேரழகி
நித்தம் நித்தம் என்னை துறத்தும் செய்திதான் என்னவோ
அகப்பட்ட தூண்டிலில் மீனின் நிலைமை என்னவோ
அகம் தொலைத்த என் நிலைமை அதுபோலே தானவோ.

எங்கெங்கோ தேடிய பின் எதிரிலே தெரிகிறாய்
எக்காரணமும் இல்லாமல் தங்கச் சங்கிலியை கடிக்கிறாய்
யாருமற்ற நேரத்திலே அருகிலே நிற்கிறாய்
ஏதுமற்று தவிக்கையில் எனக்கு யாதுமாகிறாய்.