Thursday, July 1, 2010

எம் கன்னிமாரும் கட்டிலங்காளைகளும்

நித்திரையற்ற நாட்களில் ஒருநாள்
மேகம் போல் மிதந்து
நகர்வலம் வந்தேன்.

நேற்றைய எம் கன்னிமாரும் கட்டிலங்காளைகளும்,
எவ்வாறு உரையாடினர்?
சின்னதொரு சிந்தனை.

பூவையர் அவர்தம் மேனியை பொன்னென்பார்
கரும்கூந்தலை இருலென்பார் - விழிபேசும்
வார்தைகளுக்கேது மொழியென்பார் - அந்த
மோகன புன்னகைக்கு யான் அடிமையென்பார்
எம் கட்டிலங்காளைகள்.

வாள்வீசும் வல்லவர் வேண்டும்
மெய்பேசும் நல்லவர் வேண்டும்
அரவணைப்பில் அன்னையாக வேண்டும் - அந்த
உத்தமர் எமக்கு இன்னொரு தந்தையாக வேண்டும்
என்பது எம்கன்னிமார் பேச்சு.

பூவையர் அவர்தம் நடையினை மானிட அன்னம்மென்பார்
ஜோதிநிறைந்த முகத்தினை மதியென்பார் - வெட்கி
தலைகுனிகையில் செந்நிறவானம் மண்பார்ப்தென்பார் - அந்த
மழலை பேச்சிற்கு யான் வீழ்ந்தேன்யென்பார்
எம் கட்டிலங்காளைகள்.

நித்தம் அவர்நினைப்பில் நாட்கள் நகர என்னுள்தினம்
புதிதாய்புயல் அவர்மேல் மையல் கொள்ள
அவர்தம் கண்பார்த்ததும் ஆயிரம் கவிபாட - அதைஅந்த
மணவாளர் கேட்டால் என்னை யெனென்னசெய்வாரோ
என்பது எம்கன்னிமார் பேச்சு.

பூவையர் அவர்தம் இதழ்களை மெல்லிய மலரென்பார்
கைகளில் பச்சையும் சினத்தால் சிவப்பும் இன்னபிற
வர்ணங்களை தாங்கிய வானவில்என்பார் - அந்த
கன்னியவள் நினைவுகளால் நித்திரை தொலைந்ததென்பார்
எம் கட்டிலங்காளைகள்.

நினைக்கையில்
சற்றே சிரித்துவிட்டு
மீண்டும் வீடு வந்தடைந்தேன்.

நேற்றைய பேச்சுக்களை
வைப்பதற்கு
அருங்காட்சியகத்தில்
தனியொரு இடம் உண்டோ?