எட்டு மணி நேர தூக்கம்
அம்மாவின் அரவணைப்பில் சோம்பல் முறிப்பது
பின்னர் சுடச்சுட காபி
செய்தித்தாளில் சினிமா செய்தி
செயற்கை அருவியில் (ஷோவேர்) குளிப்பது
இட்லி, தோசை, பொங்கல் எதுவாயினும் உண்பது.
எங்கோ இருப்பதாய் எண்ணிய நண்பனை எதிரில் பார்ப்பது
பேசி கொண்டு செல்லும் பொழுது எந்த பலுக்களிலும் அகப்படாதது
சட்டேன்று திரைஅரங்கில் நுழைந்து திரிஷாவை இரசிப்பது
என்ன பேசினோம் என்றறியாமல் காலை பொழுது கழிந்தது
நினைக்கையில் அகமும்முகமும் மலர்வது.
ஏதோ மறந்தவனாய் வீடு நுழைவது
எங்கு சென்றாய் என்று எல்லோரும் கடிந்து கொள்வது
காலை செய்த வேலைக்கு கொஞ்சம் உண்டு
உண்ட பின் களைப்பாறி பின் முற்பகல்
என்ன செய்வதென்று யோசித்து
அந்தி வரை ஏதும் செய்யாமல்
அரட்டை அடிக்க ஆழில்லாமல்
வீட்டில் இருப்பதை குற்றம் சொல்லி
தொலைக்காட்சி, கைபேசி என்று உறவாடி
இரவு தூங்க செல்லும்முன்
வரும் ஒரு உதயம் ஞாநோதயம்
"என்ன செய்தாய் உருப்படியாய் இன்று என்று!!!"
அசரீரீ.. எதிரொலி.. அப்பாவின் கேள்வி
எதுவாயினும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு
"நாளை செய்யறேன்.. இன்னைக்கு நான் Tired"
யாசிப்பது இவை.. வருடம் ஒரு முறையேனும் நிகழ வேண்டும் என்று..
Saturday, March 27, 2010
Sunday, March 21, 2010
தீக்குளித்தாள்
சொர்கபுரியில் வளம் உண்டு
சொல்லி அழ சொந்தம் உண்டா
மாதா என்றழைக்க ஒரு நங்கையும் உண்டு
நாதா என்றழைத்தால் நல்லவர் செவி சேறுமோ?
புல்லொன்றை வைத்தே கயவனை கிளிகொள்ள செய்தால்
வில்லேந்தும் வீரனின் பதி விரதை சீதை.
அன்னமும் அண்ணலும் உண்ணாமல் இருப்பதெண்ணி
அவ்வழி அன்னையும் மாறாமல் நடக்க
எவ்வழி தன்வழியென சிந்தையும் செயலிழக்க
அஞ்சனையின் மைந்தன் வந்தான் வனத்தில்;
வென்றான் அன்பில்; நின்றான் மனதில்;
ஏதேதோ எண்ணாமல் எண்ணத்தில் வைத்தாள் ஒருவரை
ஈரேழு கடல் கடந்து பல நூறு பர்வதம் தாண்டி
மரமேறும் முன்னோர் ஆயிரம்பேர் உடனழைத்து
போர் புரிய வருவார் அம்மானுட தெய்வம்
அவர் தன் ஸ்ரீராமன் என்றாள்; பரவசமடைந்தாள்;
எண்ணம்பூல்,
படை திரட்டி வந்தான் பகைவனை வென்றான்
அரக்கர் குளத்தை அடியோடு அழித்தான்
எல்லோரும் இன்புற்ற அந்நேரம் ஏனோ
தன் இள்ளாளை வசை பாடிய மாக்களை மறந்தான்
தானும் மனிதனென்று உலகிற்கு காட்டினான்.
தன்னோடு
சேரும் அனைத்தையும் சேர்க்கும் தீயினைமூட்ட
தன்னோடு பிறந்த தன்னோடு வளர்ந்த தன்னோடு திரிந்த
தம்பிக்கு ஆணையிட்டான் தமையன்; திகைத்தான்; துடித்தான்;
அன்னைக்கு தண்டனை அல்லவே தர்மம்; நமக்கென உரைத்தான்;
பின் கண்ணீரோடு வளர்த்தான் தீயினை.
யாவரின் புகழ் பாடும் மணவாளரே தம் பதியென்செய்தாள்?
எம் பவித்ரம் உணர்த்த இதனினும் கொடிய தீதொன்றும் உண்டோ?
நீவீர் இட்ட தீயினை சுடும் நெருப்பினை கடப்பேன்;
என்னுள் நின் எண்ணம் தவிர வேறொன்றுமில்லையென உணர்வீர்
உடன் அழைத்து செல்வீர்;
தீயை கடந்தால்; கரம் பிடித்தாள்;
இன்று:
சாப்ட்வேர் கானகத்தில் களவாடபட்டால்
கற்பும் களங்கப்படுமா?
கண்ணீரும் வார்த்தைகளும்
கணவனிடத்தில் சேர்பிக்குமா?
அஃது இல்லையென்றால் அவள் போல் தீக்குளிக்கவா?
விடை சொல்லுங்கள் நீதிபதி அவர்களே
என் விவாகமும் இரத்து ஆகுமா?
Subscribe to:
Posts (Atom)
