லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
விமான பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
மருத்துவர்கள் செவிலியர்கள் வேலைநிறுத்தம்
போனஸ் கேட்டு பஞ்சாலை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
பல்வேறு இடத்தில், பல்வேறு தொழிலாளர்கள்
வேலை நிறுத்தத்தில் ஒன்றுபடுகிறார்கள்
என்னை போன்ற மென்பொருள் வல்லுனர்களை தவிர.
So Called Software Engineers
Treat (Party) - இந்த ஒன்றை தவிர
நான் வேறு எதிலும் கண்டதில்லை
எம் மென்பொருள் வல்லுனர்களின் ஒற்றுமையை.
வெள்ளை அணுக்களை (எதிர்ப்பு சக்தியை) முற்றிலும் தொலைத்துவிட்டு
மனதிற்கு முற்றிலும் முகமுடியிட்டு
அரை நிமிடத்திற்கும் குறைவாய் அழுதுவிட்டு (நடித்துவிட்டு)
காலியான இருக்கைக்கு நங்கூரமிட்டு
நம் வேலைகளை (SMART WORK) விளையாடுகிறோம்.
வேலை நிறுத்தம் என்பது
வேலையிலிருந்து நீக்கம் என்றே அர்த்தம்.
இதை நினைக்கையில் ஒரு ஈழத்துக் கவிதை "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திலிருந்து நினைவிற்கு வருகிறது..
.......தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமிரும்..
கவிழ்ந்த இமைகள் ஒரு நாள் உயரும்...
இறுகிய உதடுகள் ஒரு நாள் துடிதுடிக்கும்...
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்...
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக...
அது வரை உங்கள் வல்லம் ஓங்குக...