Tuesday, January 29, 2013

விற்பனைக்கு

கம்பிகள் இல்லா ஜன்னல்
கதுவுகள் இல்லா அறைகள்
கூரைகள் இல்லா வீடுகள்
மனிதர்கள் இல்லா
இக்குடியிருப்புக்கு பெயர்
மிருகக்காட்சி நகர்.

இவை மட்டுமா,
மரங்கள் இல்லா
தண்ணீர் இல்லா
மொத்தத்தில் பசுமை இல்லா
ஒரு குடியிருப்பு இந்த
மிருகக்காட்சி நகர்.

ஆம்.

விளம்பரப்படுத்துங்கள் விலங்குகளுக்கு.
முதல் பகுதி தற்போது விற்பனையில்.


இவை
நீலகிரி மலைச்சரிவில்
மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு
மிக அருகில்.


பிற பகுதிகள் அவ்வப்பொழுது
விளம்பரம் செய்யப்படும்.

இந்த மனைகள்
காடுகளை தொலைத்து
மனிதர்களை துன்புறுத்தும்
விலங்குகளுக்கு மட்டும்.

No comments:

Post a Comment