நிலாச்சோறு ஊட்டி விட்டவே
இப்போ நிலவ பார்த்து பேசி நிக்கறா
நித்திரை இல்லாம வேலை செஞ்சவே
சித்திரையில் முத்து குளிச்சா.
எத்தனை நாள் தவம் கிடந்தாலோ
சிறு மயக்கத்தில கிழே விழுந்தா
தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டேன் இவள
தனிய விட்டு தவிச்சு கிடந்தேன்.
ஊரறிய வெறப்பா நின்னேன்
இப்போ உள்ளுற நடுங்கி அலைஞ்சேன்
துணிவே துணையா இருந்தேன்
இப்போ தூணப் புடிச்சு சாஞ்சு நின்னேன்.
மனமே கோயில் என்றிருந்தேன்
இப்போ மரத்தடி விநாயகர் தினம்தொழுதேன்.
பணிவே பழக்கமா வச்சிருந்தேன்
இப்போ பலஊரு கேக்க சிரிச்சு திரிஞ்சேன்.
பல்லாங்குழி வாங்கி வந்தேன்
பரமபதம் வாங்கி வந்தேன்
பலகாரம் வாங்கி வந்தேன் கூடவே
தொட்டில் ஒன்னு செய்யச் சொன்னேன்.
சுவையா பேசும் நாள் வருதே
சுகமா திரியும் நாள் வருதே
கள்ளி உன்னை சிரிக்க வெக்க
சொந்தம் கூடும் நாள் வருதே.
விதவிதமா சீனி போட்டு
பல பலகாரம் ருசிச்சதுல
உன் உடல் கூடிரிச்சே
என்பொறுப்பு கூடிரிச்சே
செக்க செவக்கும் மருதாணி இலையிலே
வண்ணவண்ணமா சித்திரம் வரைஞ்சு
உன் அழகு கூடிரிச்சே உன்கூடவே
என் உயிர் சேந்துருச்சே.
உன் அழகு கூடிரிச்சே உன்கூடவே
என் உயிர் சேந்துருச்சே.


No comments:
Post a Comment