Tuesday, November 27, 2012

நீயற்ற பொழுதில்



நெடுதூரம் நடந்து திரும்பி பார்க்கையில்:

சட்டென்று மழை.
துள்ளி குதித்தேன்,
ஓ வென்று அழுதேன்,
வேகமாய் ஓடி
கால்கள் இழைத்தேன்,
இளைப்பாற அமர்ந்ததும்
சலனம் கொண்டது மனம்.
நெஞ்சம் இல்லையெனினும் ஈரம் இருக்கிறது  - மாற்றான்.


சேமிப்பை தூசு தட்டினால்:

கொஞ்சம் சில்லறை,
என் குறும்புகள்,
சொந்தம், சுகம், துக்கம்,
தோழமையும்,
உன் புகைப்படம்,
முடிவில் நீ தந்த முத்தம்.
கண்கள் போனபின்பும் காயம் ஆறவில்லை - தாண்டவம்.

எது தொடங்கினேனோ அது
உன்னிடமிருந்தே தொடங்கப்பட்டது.
எதை செய்கிறேனோ அதை
நீயே வழி நடத்துகிறாய்.
நீயில்லை என்பது பொய்.
நீயே எல்லாம் என்பது மாயை.
நான் இருந்தும் இல்லாதிருக்கிறேன் என்பதே மெய் - மதுபானக்கடை.

படிப்பதை நிறுத்த வில்லை நீ
கிறுக்கல்களை தொடர்கிறேன் நான்
முகம் பார்த்து சிரித்து பின்னர்
புரம் பேசி திரிபவர்களுக்கு
காத்திருக்கிறது அவர் அவர்களுக்கான - Pizza.


No comments:

Post a Comment