நித்தம் நித்தம் ஒரு எண்ணம்
நித்திரையில் மிதந்து வரும்
பக்கம் வந்து விசிறி விடும் அதை
எண்ணி எண்ணி நீ வாழ்ந்தால்
எட்டி நின்று ஓலமிடும்
ஓநாய்கள் ஓடிவிடும்.
கொட்டித் தீர்க்கும் பேய் மழையோ
சுட்டெரிக்கும் அனல் வெயிலோ
நித்தம் நித்தம் ஒரு எண்ணம் அதை
நினைத்து நினைத்து நீ முயன்றால்
கெட்ட கெட்ட நினைவுகள் எல்லாம்
தூர தூர விலகிவிடும்.
தனையன் என்ன தாய்க்கு சுமையா
கனா என்ன கண்ணுக்கு பாரம்மா
நித்தம் நித்தம் ஒரு முயற்சி அதை
நீ நாளும் பொழுதும் செய்து வந்தால்
வெற்றி வேந்தன் தோள் கொடுத்து
தேரில் ஏற்றி உலா வருவான்.
பட்ட மரம் காய்க்கும்
சருகுகள் சரிந்து பூப்பூக்கும்
தனி மரம் தோப்பாகும்
வெள்ளி நிலா சாய்ந்ததும்
புது விடியல் வந்து
வாசற்படியில் கோலமிடும்.

No comments:
Post a Comment