Thursday, September 1, 2011

இனியவை நாற்பது


முப்பத்து முக்கோடி மக்களுக்கு தலைவராய் இருப்பினும்
குப்பத்தில் கோடியை காணாதவராயினும்
உடம்பிலே மஞ்சள்கயிறை அணிந்தவராய் இருப்பினும்
நாத்திகம் பேசித் திரியும் சில நல்லவராய் இருப்பினும்
வெப்பத்தில் தவித்த புழுவாக இருப்பினும்
உயிருள்ள எதுவாகவும் இருப்பினும் - கணேசா
உன்னைகண்டு மனம் வெம்பியவர் எவருமில்லை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணேசா!




தாம் தரிகிட தீம் தரிகிட என்று சந்தங்கள் பாடியவனுக்கு
வளையலோசை புதுவரவாய் வரும்நாள்.
கையிலே கீபோர்ட் பிடித்து கழுத்திலே Tag அணிந்தவனுக்கு
கிராமத்து Cleopatra கரம் பிடிக்கும் இனியநாள்.
அயராது பேசி, ஹை பிட்சில் பாடி, அவ்வப்பொழுது அசத்தியவனுக்கு
அழகாய் இன்று கோட் சூட் அணியும் நாள்.
வீட்டு செலவிற்கும், சொந்த செலவிற்கும், இன்னபிற செலவிற்கும்
இலாக்கா அமைச்சர் அமையும் நாள்.
அவன்-இவன் என்று நண்பர்கள் அழைத்தவற்றிற்கு
அவர் என்று அழையுங்கள் என்று எதிரொலிக்கும்
ஸ்ட்ரிக்ட் ஆன முதல் அமைச்சர் அமையும் நாள்.
இல்லறம் நல்லறமாக
இனிய மணநாள் வாழ்த்துக்கள் - 'வெங்கடே'சா.

இன்று
நல்லதை தொடங்கும்
நண்பர்களுக்கெல்லாம்
நாற்ப்பதாய், நானூறாய், நாலாயிரமாய் பெருக
வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment