Thursday, July 21, 2011

ஆயுளின் பாதியில்

உறக்கம் விழித்தவன் முகம் போல்
மனதில் திடீர் பயம்
தேள் கொட்டிய கால்கள் போல்
நடப்பதில் சிறு நடுக்கம்
யாக்கை பற்றி எரியும்
விழிகளும் உடன் சேர்ந்து கொள்ளும்
உச்சி முதல் பாதம் வரை
இரத்தத்தின் சீற்றம் அதிகரிக்கும்
குளிர்விக்க பொருள்கள் இருப்பினும்
தொடர் முயற்சி இல்லாமல் தோல்வியுறும்
எதிர் வரும் மனிதரை காண முடியாமல்
கண்கள் நாணி கடவுளை வேண்டும்
வீட்டுக்குள் முடங்கி இருந்தால்
பிம்பம் காட்டும் கண்ணாடி பயமுறுத்தும்

எது எப்படி இருப்பினும்
என்னவென்று ஆராய்ந்து பார்ப்பதற்குள்
ஆயுளில் பாதி முடிவுறும்
அதாவது
ஆயுளின் பாதியில் முடிவுதிரும்.

No comments:

Post a Comment