Tuesday, May 31, 2011

மழைக்காலம்


தொட்டுவிட்டு நான் தொலைவதை இரசித்த முகம்
முத்தமிட்டு நான் மலர்வதை இரசித்த முகம்
மறைந்துகொண்டு நான் மன்றாடுவதை இரசித்த முகம்
மழைக்காலம் வந்தால் மட்டும்
மனதில் மின்னல் போல் வருவதென்னவோ?

நீ எண்ணும் காதல் காவியம்
நான் பாடும் தேவ கானம்
நம்மை சேர்க்கும் ஒரு பூவாசம் இதையெண்ணி
குளிர் தென்றல் அடித்தது போல்
மழைக்காலம் வந்தால் மட்டும்
உடல் சிலிர்ப்பதேன்னவோ?

சகியே நீ சட சடவென்று பொழிவதும் உண்டு
ரதியே நீ தட தடவென்று வெடிப்பதும் உண்டு
சொட்டு சொட்டாய் சில பொழுது சிரிப்பதுண்டு
மழைக்காலம் வந்தால் மட்டும்
மாமல்லபுறத்து சிற்பம் ஆவதேன்னவோ?

சிதறாமல் கையளவு அள்ளியெடுத்த அமுதம்
ஒரு நாள் முழுதும் இமைக்காமல் உதித்த கனவு
இதுபோல இன்னும் நூறு நினைவு
மழைக்காலம் வந்தால் மட்டும்
என்னுள் விடிவெள்ளி போல் நீ முளைப்பதேன்னவோ?

No comments:

Post a Comment