வெள்ளை நிறத்தில் ஒரு குட்டி
கருஞ் சாந்து நிறத்தில் ஒரு குட்டி
சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி
சுருள் சுருள் முடியாய் ஒரு குட்டி
கன்னங்கள் உப்பியது போன்று ஒரு குட்டி
கையில் வாள் பிடித்து எப்பொழுதும்
போர் புரியும் ஒரு குட்டி
தூக்கத்திலே மேல் ஏறி விளையாடும் ஒரு குட்டி
அமுதுண்ண அழைக்கையிலே ஆர்ப்பரிக்கும் ஒரு குட்டி
எல்லோர் அமுதையும் அமைதியாய் உண்ணும் ஒரு குட்டி
ஓயாது அழுது எல்லோர்
அனுதாபம் பெரும் ஒரு குட்டி
ஆட்டின் வாலை பிடித்துக்கொண்டு
தெருவிலே ஓடும் ஒரு குட்டி
கண்டிக்கும் சமையம் சிரிக்கும்
முகம் போன்று ஒரு குட்டி
கையில் எடுத்து விளையாடும் பொழுது
கன்னத்தில் அடிப்பது போன்று ஒரு குட்டி
எண்ணி எண்ணி இன்புற்றிருக்கும்
இவ்வேளையில்
இவர்கள் யாவரையும்
பெற்று தருவாளோ
என் ஸ்ரீ வரலக்ஷ்மி!

No comments:
Post a Comment