Wednesday, March 9, 2011

ஒரு குடம் கண்ணீர்

பழையது என்று ஒதுக்கி வைத்த பொருட்களில்:

என் வயதொத்த
"தொலைகாட்சி".
மரத்தால் இழைத்த
"பீரோ".
ஓரிருமுறை அணிந்துகொண்ட
"கராத்தே டிரஸ்".
இரும்பிலே வாங்கிய
"Suitcase".
என்னை அமர வைத்து
அப்பா கால்மிதித்த
"சைக்கிள்".
பெரியது என்றாலும்
சத்தம் வரும்
"Wet-Grinder".

இவையுடன் இன்று
இணைந்து கொண்டது
என் "கேமெராவும்".

ஜீவன் இல்லையெனினும் ஜீவித்திருந்தது
இயற்கையுடன் என்னை இணைத்தது
சுற்றுலா என்றதும் பட்டியலில் முதலில் சேர்ந்துகொண்டது
என்னை சில சமயத்தில் அழகாய் காட்டியது
குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக "Smile Please" செய்ய வைத்தது
இன்று இறுதியாய் ஒவ்வொருவர் கண்ணிலும் பல நீர் துளிகள்
வாங்கிக்கொண்டது ஒரு குடம் நிறையும் அளவிற்கு.

No comments:

Post a Comment