ஒரு நங்கை
குடை தனை விரித்து
ஒரு வேங்கை
இரு கைகளை விரித்து
ஒரு மழலை
இருவர்க்கும் மத்தியில்
கப்பல் செய்து
மழையை இரசித்துக்கொண்டிருந்தனர்!
மழை நீர்
துளிகளாய் தொடங்கி பின்பு
அங்காங்கே குளங்களாய் மாறி
பெருக்கெடுத்து ஓடும் நதியென
உருவெடுத்தது!
மழலை கண்களில்
மழை விட ஆரம்பித்தாள்!
குடைக்கு பயந்தோ இல்லை
வேங்கை சீற்றத்திற்கு பயந்தோ
மழை நிற்கவில்லை.
கப்பல் கவிழும் என்றதால் நின்றது!
ஏன்?
மழையும் ஒரு பெண் அன்றோ!
காரணம்-
மென்மைக்கு உவமை பெண்மையன்றோ!
இயற்கை(யாய்)
தாய்க்கு தெரியும்
பிள்ளையின் தவிப்பு!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!

No comments:
Post a Comment