கால்கள் வலிக்க நடந்துவிட்டேன்
நா வற்றும் வரை பேசிவிட்டேன்
இமைகள் களைத்துப் போகும் வரை இமைத்துவிட்டேன்
கண்கள் சிவக்கும் வரை தொடர்ந்துவிட்டேன்
உள்ளங்கை வலிக்கும் வரை உன் கைகளை பிடித்துவிட்டேன்
மூச்சிரைக்கும், நுரையீரல் முற்றிலும் சாம்பலாகும்
இருமல் வரும் தெரிந்தும் தொடர்ந்துவந்தேன்
இன்னும் சற்று நேரத்தில்
நீ இறக்கப் போகிறாய்
நானும் ஒரு நாள் இறப்பேன்
நீண்டுகொண்டே இருக்கிறது இந்த பாதை
அடுத்த பீடி, சுருட்டு, வெண்சுருட்டு கிடைக்கும் வரை.

No comments:
Post a Comment