Thursday, March 31, 2011

தூரம்

அண்ணி கிடைத்து விட்டாள் என்று
தங்கையும் தம்பியும்
மறு மகள் கிடைத்து விட்டாள் என்று
அப்பாவும் அம்மாவும்
அன்பாய் அழகாய் ஒரு துணைவி
அமைந்துவிட்டாள் என்று நானும்
சந்தோஷத்தில் திகைத்து இருந்தோம்.
நண்பன் வருந்திக் கொண்டிருக்கிறான்
காரணம்:
நண்பர்களுக்கிடையில்
பெண்ணொருத்தி
வந்தால் நட்பு
தூரமாகிவிடுமென்று.

No comments:

Post a Comment