Monday, March 21, 2011

அரைகிலோ கொலை

வாய் பொத்தி
குமட்டலை சமாளித்து
நூறு அடி தூரம்
தள்ளி நின்று
இரத்தக் கறை அதில்
சதையும் கொஞ்சம்
எழும்பும் நிறைந்த ஒரு
கருப்பு கவரை நண்பன்
தூக்கிக் கொண்டு
வரும் வரை
காத்திருக்கிறேன்.
வேகமாக வீடு வந்தடைந்ததும்
நண்பனையும் முந்திக்கொண்டு
சமையர்காரரிரடத்தில்
"அண்ணா, சிக்கன் கபாப் செஞ்சுடுங்க"
என்று உரைத்த பின்
மூச்சு வாங்கி
பின் கபாபை ருசித்த
கணம் உணர்வதுண்டு
நான் சைவம் என்று.

No comments:

Post a Comment