பத்திரமாக செல்
வந்து சேர்ந்துவிட்டாயா
நேரத்திற்கு உணவுக்கொள்
சிரித்துக்கொண்டே பேசு
பூச்சூடி பின்னலிடு
இருமுறையேனும் புடவையுடுத்து
ஆசைகள் ஒவ்வொன்றாய் கேள்
எல்லாம் கேட்டுவிட்டு
சீக்கிரமாக உறங்கு (உறங்கிவிடாதே).
இந்த ஆத்திச்சூடி
ஆரம்பம்தான்.
வெட்கப்படாதே.

No comments:
Post a Comment