Sunday, March 20, 2011

நான் இராவணன்.நீங்கள்?


வெண்ணிற ஆடை அணிந்து
உன் தோழிகளுடன்
அணிவகுத்து நிற்கும் உன்னை
இரக்கமே இல்லாமல்
பிடித்து இழுத்து, கசக்கி
என் தேவை தீர்ந்ததும்
குப்பையில் எரியும் பொழுது மட்டுமே
நினைவு வரும்
உனக்காக வெட்டப்படும் மரங்களின்
எண்ணிக்கை.

No comments:

Post a Comment