பார்வை இழந்து
வார்த்தை வராமல்
பாதை தவறி
முடிந்த வரை
என்னை நானே
காயப்படுத்தி
அனைத்து துன்பங்களையும்
அனுபவித்த பின்
உன்னை முற்றிலும் கழற்றி எரிந்து
உரு மாறியிருக்கும்
வைரம் நான்.
என்னுள் மீண்டும் தோன்றி
ஒரு பூகம்பம் தோற்றுவிக்காதே.
ஆதலால் தான் சொல்கிறேன்
நீ இல்லாமல் இழந்ததைக் காட்டிலும்
நீ இருந்து இழந்ததே அதிகம்.
அவை எல்லாவற்றையும்
பட்டியலிட தேவையில்லை
என் காதலே.

No comments:
Post a Comment