உயிர்
மெய்
உயிர்மெய்
ஆயுதம்
எதுவும் வரவில்லை!
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
எதுவும் வரவில்லை!
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
எதுவும் வரவில்லை!
தொல்காப்பியர்
அகத்தியர்
மொழிக்கென்று தோன்றிய
தமிழ் கடவுள்
எவரும் வரவில்லை!
மொத்தத்தில் தலைப்பை
தவிர வேறெதிலும்
தமிழ் வரவில்லை
வெள்ளிவிழா கொண்டாடிய
ஒரு தமிழ்ப்படத்தில்!

No comments:
Post a Comment