கால்கள் நடனமிட பார்த்திருக்கிறேன்
அது ஏன் என் இமைகள் நடனமிடுகிறது?
அக்னிவெயிலில் வியர்வையை பார்த்திருக்கிறேன்
அது ஏன் இந்த நடுங்கும் குளிரில் வியர்க்கிறது?
நூறு பேர்முன் பேசியிருக்கிறேன்
பக்கத்தில் யாரும் இல்லை
அது ஏன் என் இதயம் இப்படி படபடக்கிறது?
எத்தனை முறை இதை செய்திருக்கிறேன்
அது ஏன் எனக்கு இன்று இப்படி நடுங்குகிறது?
விரல்களால் வீணை மீட்டியிருக்கிறேன்
நான்கு முறை அல்லது அதற்கும் மேலாக
அழுத்த வேண்டும்
அது ஏன் என் விரல்கள்
ஒரு நிலைபாடில்லாமல் உதறுகிறது?
காக்க காக்க கனகவேல் காக்க
ஐயோ மற்றவையெல்லாம் மறந்துவிட்டதே முருகா?
இருமுறை தவறறிளைத்துவிட்டேன் கடைசி முயற்சி
அய்யய்யோ வடை (பணம்) போச்சே!!
கடவுச்சொல்லை முற்றிலும் மறந்துவிட்டேன்
தடை செய்து விட்டது தானியங்கி!!

No comments:
Post a Comment