Saturday, February 26, 2011

உற்ற தோழன்


அக்கம் பக்கம் பாராமல்
ஆணியடித்தார் போல் ஒருவன்

தலையில் இடியே விழுந்தாலும்
என்னாச்சு என்று கேட்கக்கூடிய ஒருவன்

புரிகிறதோ இல்லையோ அது A.R.Rahman
பாட்டு என்று கதறும் இளம்பெண்கள்

யான் பெற்ற இன்பம் பெருக
என்பட்க்கத்திருக்கை நண்பரும்
என்று பங்கிட்டு கொள்ளும் இருவர்

எம்.எஸ்.வி, இளையராஜவில் ஆரம்பித்து இன்று
விதவிதமாக அவர் அவர் விருப்பமாக
எதோ ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்

பணிக்கு செல்லும் சமயத்தில்
செவி கேளாதோர் பள்ளியில்
சேர்ந்து விட்டோமோ என்றொரு பயம்
எல்லோர் காதிலும் ஒரு கருவி i-pod

ஒருவேலை இது இன்னொரு
அடையாள அட்டை
என்று கூட தோன்றும்

இதை மாட்டிகொண்டால்தான் வேலையே
ஓடும் என்று அதன் பெருமை
உணர்த்தும் சிலர்

தாமதமாக உணர்ந்துகொண்டேன்
எனது வேலைக்கு இது
ஒரு Pre-requisite என்று
சில சமயம் பிடித்த பாடலில்
மனம் கரைந்து விடும்
வேலையும் முடிந்து விடும்
பல சமயம் பிடிக்காத வார்த்தைகளை
வடிகட்டும் அதனாலேயே
வேலையும் முடிந்து விடும்.

No comments:

Post a Comment