Friday, February 18, 2011

கள்வன்-To-காதலன்


















எழுத்துகளற்ற
குறுஞ்செய்திகளும்
இமைக்காத பார்வைகளும்
உருண்டோட காத்திருக்கும்
கண்ணீர் துளிகளும்
என்னை விடாமல்
பற்றிக்கொண்டிருக்கும்
உனது கைகளும்
உதட்டோரத்தில் பூத்திருக்கும்
மென்புன்னகையும்
இன்னும் இன்னும்
உனது விளையாட்டுகளும்
அப்பப்பா..
இவற்றுள் எவற்றை
ரசிப்பது என்று தவிக்கையில்
சட்டேன்று தோள் சாய்ந்து கொள்கிறாய்.

கள்வனாக ரசித்துக் கொண்டிருந்தவனை
காதலனாக ரசிக்க வைத்துவிட்டாய்!

No comments:

Post a Comment