ஒரு அழுகுரல் கேட்கும்பொழுது,
ஒரு சிரிப்பொலி கேட்கும்பொழுது,
தூரத்தில் எவரேனும் அழைக்கும்பொழுது ,
இல்லை ஒரு பாடல் கேட்கும்பொழுது,
என்னவென்று தோன்றுமோ
செவித்திறன் அற்றவர்க்கு!!
வானவில் கண்டிரா?
என் ஆடையின் நிறமென்ன?
புதிய திரைப்படம் கண்டிரா?
வெளிச்சம் அதிகமாய் இருக்கிறதா?
இந்த கேள்விகள் கேட்கும்பொழுது
என்னவென்று தோன்றுமோ
பார்வையற்றவருக்கு?
இவைதான் என் நிலைப்பாடும்
நீ இவ்வாறு கேட்கும்பொழுது
"உறக்கத்தில் என்னை நினைத்தாயா?"

No comments:
Post a Comment