ஓடி விளையாடி
ஊரார் முன்
கூடி கதை பேசி
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!
நின் நினைவினை
சுமந்தபடி நீண்டதொரு
பயணம் சென்று
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!
பிடி பிடியென்று
நீ பொடிவைத்து
விளையாடி
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!
போடி போடியென்று
நான் செல்லக்
கோபங்கள் சுமந்து
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!
தேடி அலைந்து
பாடித் திரிந்து
ஆடி களைத்து
நாடி அடங்கியதடி
என் செல்லமே!
தாயாக தாய்வீடு
சென்று நம் பிள்ளையை
ஈன்று இன்றோடு
நாட்கள் நானூறு
ஆனதடி செல்லமே!
தனியாய் ஒருபிள்ளை
உன்னை பிரிந்திருக்கையில்
விழியோரமாய் நீர்
வழியுதடி
என் செல்லமே!
சீக்கிரம் வந்து விடடி!
என் செல்லமே!
சீக்கிரம் வந்து விடடி!

No comments:
Post a Comment