Sunday, February 20, 2011

கண்ட-திருக்கோலம்


கல்லூரி வகுப்பறையில் கிறுக்கியவை
தேர்வறையில் வினா தெரியாமல் கிறுக்கியவை
என் தேவதை(கள்) பாடும் பொருளாய்
நினைத்து கிறுக்கியவை
அன்று வந்த காதல் படங்களை
நினைத்து கிறுக்கியவை
இவையெதையும் சேகரித்து வைக்கவில்லை
ஆனால்
நண்பன் அதை மேடையேற்றினான்
ஊர் அறிய அதை மேடையேற்றினான்
விகடனில் அவை பிரசுரிக்கப்படுகின்றன
பின்பு புத்தகமாய்
கல்லூரி பருவத்தின்
கிறுக்கல்கள் மேடையேறும் நாள்
இரண்டு நிமிடங்களில் முதல் பிரதியை
பெற வருகிறார்......

சட்டேன்று கனவு கலைந்து
என்னைநோக்கி வினவுகிறான்
காலையில் கண்ட கனவு பலிக்குமா?
இல்லை நாட்கள் பின்னோக்கி நகர்ந்து
நம் கல்லூரி பருவத்தை அடையுமா?

No comments:

Post a Comment