தூறல் விழ காத்திருந்தேன்
அடைமழையாய்
நீ வந்தாய்
வார்த்தை கிடைக்க தவமிருந்தேன்
கவிதையாய்
நீ வந்தாய்
மழலை காண காத்திருந்தேன்
கார்மேக கண்ணனாய்
நீ வந்தாய்
நிழல் தேடி அலைந்துவந்தேன்
அந்திப்பொழுதாய்
நீ வந்தாய்
கண்மூடி தவமிருந்தேன்
கடவுளாய்
நீ வந்தாய்
எதையோ நினைத்தபொழுது
எல்லாமாய்
நீ வந்தாய்
இன்று உன்னையே
நினைக்கிறேன்
கனவிலும் வரமருக்கிறாயே!!

No comments:
Post a Comment