ஆயர்கலை அறுபத்துனான்கை
கற்பது இருக்கட்டும்
சமையர்கலையை உன்னிடத்தில்
கற்பதாக ஒரு நாள்
வாக்களித்திருந்தேன்!
எப்பாடுப்பட்டாலும் ஞாயிற்றுகிழமையில்
சமையல் என்னுடையதென்று
மற்றொரு நாள்
வாக்களித்திருந்தேன்!
நீ களைத்துப்போயிருந்தால்
காபி டீ வைத்துதருவதாய்
பிறிதொரு நாள்
வாக்களித்திருந்தேன்!
வெந்நீர் மட்டுமே வைக்கத்தெரிந்திருந்தேன்
மற்றவையெல்லாம் உன்னிடத்தில்
கற்றுக்கொள்வதாய்
எனது மீது ஆணையாக
வாக்களித்திருந்தேன்!
புதினாவோ மல்லியோ ஏதோ
ஒன்றில் சட்னி அறைத்து
அரிசி மாவில் இட்லியோ தோசையோ
ஏதோ ஒன்றை சமைத்து
வெள்ளை இரவையில் கேசரி செய்து
ஒரு சிறு விருந்து அளிப்பதாய்
வாக்களித்திருந்தேன்!
நியூயார்க் நகரில் தனிமையில்
பெங்களுரு கடையடைப்பின் அதிர்ச்சியில்
சென்னையில் கொளுத்தும் வெயிலில்
மும்பையில் வயிற்று வழியில்
கோவையில் பெற்றோர் திருமணத்திற்கு
சென்றிருந்த சமையத்தில்
பசி பலவிதமாய் உருவெடுத்து
எல்லா வாக்குகளையும்
செல்லாத வாக்காய்
மாற்றிவிட்டது!
பன்ச்:
தனித்திருந்தேன்
உன் நினைவு வந்தது
விழித்திருந்தேன்
கவிதை வந்தது
பசித்திருந்தேன்
கவிதை உன்நினைவு
இவையோடு சேர்ந்து
பத்தும் பறந்துவிட்டது!!

No comments:
Post a Comment