Tuesday, February 22, 2011

அனுமனில்லை















நேர்கொண்ட
பார்வை
எதிர்கொள்ள ஆயுதமில்லை

சீர்கொண்ட நடை
நினைத்துநினைத்து உறக்கமில்லை

நேசம்மிகு புன்னகை
சேமித்து வைக்க இடமில்லை

ஆழம்மிகுந்த வார்த்தை
அர்த்தம்தெரியும் ஞானமில்லை

அழகாய் நீயுடுத்தும் ஆடை
நூலாக அதில்நானில்லை

அடர்த்தியான கேசம்
துயில்கொள்ளும் எண்ணமில்லை

செழிப்புமிக்க தேகம்
அபகரிக்கும் ஆசையில்லை

பொய்யான கோபம்
புரிந்துகொள்ளும் மனமில்லை

வில்லென புருவம்
அம்பெய்திட நான்ராமனில்லை

தற்போது
எந்த தேசத்தில் நீ
அறிந்து சொல்ல அனுமனில்லை!

No comments:

Post a Comment