Monday, February 14, 2011

இலக்கணம்















ஓர் எழுத்து எனப்படுவது
யாதெனில்...
உனது நெற்றிபொட்டின் நடுவில் ஒரு வட்டம்
உனது உதடுகளுக்கு கீழ் உள்ள ஒரு மச்சம்
உனது இரு புருவத்தின் மத்தியில் ஒரு புள்ளி
அல்லது மூக்குத்தியின் ஒரு முத்து.

ஓர் சொல் எனப்படுவது
யாதெனில்...
சற்று கடினம் தான்.
உனது கை விரல்கள்
அல்லது கால் விரல்கள்

ஓர் வாக்கியம் எனப்படுவது
யாதெனில்...
ம்..
உனது மொத்த உருவம்.

ஓர் மொழி எனப்படுவது
யாதெனில்...
எப்படிச் சொல்ல..
ஓர் எழுத்தென்றால் நீ.
இரண்டெழுத்தென்றால் நாம்..
மூனெழுத்தென்தென்றால் நம் காதல்!!!

No comments:

Post a Comment