அலைகள் உரசி
கரைகள் அழுவதுண்டா?
முகில்கள் மோதி
மலைகள் உடைவதுண்டா ?
தேனீக்கள் கடித்து
பூக்கள் அழுவதுண்டா?
அன்பே இல்லாத
உயிரினம்தான் உண்டா?
இவை புரிந்து கொள்ள கடினமென்றால்
தூய தமிழில் புரிய வைக்க முயற்சிக்கிறேன்.
சேதாரம் இல்லாத
தங்கச்சங்கிலி உண்டா?
அன்பளிப்பு வாங்காத
அட்மிசன் தான் உண்டா?
நாலுபேர் வரிசை இல்லாத
ATM தான் உண்டா?
திங்கட்கிழமை வேலை செய்யும்
மென்பொருள் வல்லுநர் உண்டா?
இவையேதும் சாத்தியம்
இல்லையென்றால்
என் முத்தங்கள் சுவைத்து
உனக்கு காய்ச்சல் வர வாய்ப்பேயில்லை!!

No comments:
Post a Comment