பூங்காவில்
நான் பார்வையற்றவனாய்
இருக்க விரும்பவில்லை.
ஒரு ஜோடி சிரித்துக்கொண்டு
ஒரு ஜோடி பேசிக்கொண்டு
மற்றும் இருவரில்
ஒருவர் அழுதுகொண்டு.
இன்னும் பலரோ பரந்தாமன் போல்.
சண்டையிட கைகள் நீண்டு
இருவேறு துருவமாய்.
பின்னர் சமதானாமாய் இதழ்கள் குவிந்து
ஒருவராய்.
பார்க்கசென்றதென்னவோ பூங்காவை
பார்த்து ரசித்ததேன்னவோ காதலை.
ஏனெனின்
முகங்கள் வேறுபட்டாலும்
நீக்கமற நாம் நிறைந்திருப்பதாய் உணர்வு!!

No comments:
Post a Comment