Thursday, May 27, 2010

எவர் வீட்டு திண்ணையில் உறங்குவேன்?

கால்கள் களைக்க ஓடியாடி
கைகள் களைக்க ஆடிபாடி
உதடுகள் சிரித்து உறவாடி
கண்கள் சிவக்க கோபமாகி
பின் சாந்தமாகி, மௌனமாகி,
ஒதுங்க இடமில்லாமல்,
உறங்க வழியில்லாமல்
நகர்வலம் வந்தேன்.

கோவில் சென்றேன்; அர்ச்சகர் துறத்தினார்;
மாளிகை சென்றேன்; மன்னர் துறத்தினார்;
அடுக்குமாடி வீடுகளுக்கு சென்றேன்; காவலாளி துறத்தினார்;
கிராமத்தில் மச்சு வீடுகள் துறத்தின.

ஆறு கால பூஜைகள் உண்டு
அபிசேக அலங்காரம் உண்டு
காணிக்கை பல வடிவில் உண்டு எனக்கு.
என்ன இருந்து என்ன பயன்?
உறங்க திண்ணை இல்லையே!!

No comments:

Post a Comment