Monday, April 26, 2010

காட்சி - 1 - கடவுள் வாழ்த்து

மூவோன்பது வருடத்தின் தேக்கமோ
வெளி உலக பெண் பிள்ளைகள் பேசாத ஏக்கமோ
யாமறியேன் பரம்பொருளே
முதற் கடவுள் உன்னை தொழுது
முதற் தவணை வைத்துவிட்டேன்
மாதம் பனிரெண்டு மறுமுறை சுழழும்முன்
என் சரிபாதி நானறிய நல்வழிஒன்றை நீ காண்பி.

குருக்கள்: சங்கரா!! பிரசாதம் வாங்கிக்கோ! எல்லாம் அவன் பார்த்துப்பான். நீ கவலைபடாம அடுத்த வேலையப்பாரு.

காட்சி - 2 - வாழ்த்துரை

தன் பார்வைக்கு அழகாய் குரலில் இனிமையாய்
செயல்கள் அனைத்தும் செம்மையாய்
இப்படி மேலும் பல பொய்களாய்
பல பெண்களை கடந்து,
சில இரவுகள் விழித்து,
கற்பனையை ஒரு காகிதத்தில் கிறுக்கி
தனக்குள் பூட்டினான்.

தந்தை: பொண்ணு எப்படி டா இருக்கணும்?
..............: ம்.. அது வந்து.. அம்மா போலப்பா!!
அனைவரும்: !@#!@#!@#

காட்சி - 3 - ஏற்புரை

சூரியன் சந்திரன் இராகு கேது
சேதுவாய் மாற்றி - பின்
புதனும் சுக்கிரனும் மேட்டில் அமர்ந்து
சனியும் செவ்வாயும் இன்னல்கள் கொடுத்து
இப்படி இந்த அன்றாட நிகழ்வுகள்
ஆறு மாதங்களை கடத்தி சிங்காரம் சீர் குலைந்து
சினம் கொண்டுஅமர்ந்தான்.

அம்மா: புரோக்கர் அய்யா, நல்ல ஜாதகமா எங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ண பாருங்க.

காட்சி -4- வரவேற்புரை

நேரம் காலம் ஒன்றாக கூடி
சுற்றமும் நட்பும் புடைசூழ
பெண் பார்க்கும் நாளும் நெருங்கியே வந்தது.
பண்பாட்டின் உடை உடுத்தி, எதிரெதிரே சந்தித்தார்கள்.
நாகரீகம் கருதி அருகருகே சந்தித்தார்கள்.
சமைக்க தெரியுமா? இசையும் பரதமும் இயற்றிட வருமா?
மேலும் பல கேள்விகள் பெண்ணை சங்கடத்தில் ஆழ்த்த
என் செய்வது என்றறியாமல் அவள் மயங்கியே விழுந்தாள்.

சுற்றம்: பொண்ணு ரொம்ப பலவீனமா இருக்கா? இது சரிபட்டு வராது?
நட்பு: டேய் அப்படி என்னடா கேட்ட?

காட்சி - 5- வஞ்சி உரை

பெயர் மட்டும் தெரிந்து
முறிந்துபோன முதல் வரனை மறந்து
தொடர்ந்தான். படையெடுத்தான்.
ஒன்று பத்தாகி, பத்து நூறாகி
தேடலில் தொலையும்முன் விழித்துக்கொண்டான்.
தன் இறுக்கங்களை தளர்த்திக் கொண்டு
இரு கண்களை திறந்து கொண்டு,
பிடிச்சிருக்கு என்றான்.

பெண்: எனக்கு உங்கள புடிக்கள. மன்னிச்சிடுங்க.
............: ?@#$%

(தொடரும்..)

No comments:

Post a Comment