ஐந்தாவது மாடி நான்கு வீடுகள்
அதில் கதவு எண் 4A
மூன்று அறை ...
முற்றம்?? அகராதியிலே தேட வேண்டும்
வாஸ்து பார்த்து கட்டியதாய் நினைவு
வஸ்திரங்கள் அங்காங்கே காய வைத்திருப்போம்
காற்று புகும் அறைகள்
வெப்ப கதிர் வியர்வை தரும்
கடற்கறை காண வாய்ப்பில்லை
மழை வந்தால்........ இரசிப்போம்
மற்றபடி சுகம் துக்கம் கலந்தே இருக்கும்
சமையலறை தவிர்த்து
மற்றவையில் பொருட்கள் கலைந்தே கிடக்கும்
பள்ளியறையில் பல் இளித்துக் கொண்டிருக்கும் ... China பொம்மை
வலதுகரம் கைபேசி அலங்கரித்தது
தொலைக்காட்சி தானியங்கி இடக்கையில் தஞ்சம் புகுந்தது
மடியிலே கணினி
எதிரிலே ஜனனி
ஸ்பரிசம் பட்டும் பஞ்சனை நனைந்தும்
பரிதவித்து பார்வை நிலைகொள்ளாமல் நான்
பாவம் என்னதான் செய்வாள்
என் பிஞ்சு குழந்தை....


No comments:
Post a Comment