Sunday, June 30, 2013

என்னை மீட்டுயெடு...

Taken By: Ashok
Flickr Profile: http://www.flickr.com/people/aa_photographe/
Flickr Photo: http://www.flickr.com/photos/aa_photographe/7858540852/





























சாலையோர தேநீர் சுவைத்து குடித்து
இறுக்கி அணைத்துக்கொண்ட
நெடுதூர பயணத்தின் நடுவினிலே
கருமேகங்கள் சூழ்ந்து
அடாது பெய்கிறது பேய்மழை...

மரங்கள் சூழ்ந்த பூங்கா
மலர்கள் நிறைந்த புல்வெழியின் நடுவினிலே
நீயும் நானும்
விரல்களால் கோலமிடுகையில்
தட தடவென  பெய்கிறது மழை...

அஸ்தமன வேளையிலே
கடற்கரைதனில் கால்கள் நெனைக்கிறோம்
மணல் மேட்டில் அமர்ந்து
மாறி மாறி உலரிக்கொண்டிருந்த தருணம்
பட படவென பெய்கிறது மழை...

நிலா உலாவும் வானம்
யாருமற்ற மொட்டைமாடி
ஒரே போர்வைக்குள் நாமிருவர்
கதைகள் கதைத்துக்கொண்டிருந்த தருணம்
சட சடவென பெய்கிறது மழை...

உன் நினைவுகளில் மூழ்கிய என்னை
அடியோடு கரைக்க மழை
போராடிக் கொண்டிருக்கிறது.

தொலைபேசி உரையாடலோ அல்லது
குறுஞ்செய்தியோ,  மின்னஞ்சலோ
ஏதேனும் ஒன்றை அனுப்பி
என்னை மீட்டுயெடு தங்கமே...

No comments:

Post a Comment