நாதம் சங்கீதம் முழங்க சொந்த பந்தம் கூடி
தெரு முழுதும் பந்தல் அமைத்து வாழை மரம் கட்டி
சீர் கொண்டு போக நாற்பது வண்டி சொல்லி
வடை பாயச விருந்து மூவேழு வேலைக்கும் உருவாகி
தேவலோக சொர்க்கம் எங்கள் வீட்டில் மலர்ந்தாச்சு.
பசியென்று வந்தால் பரிமாறும் மாதா அவள்
மதியெங்கே என தேடினால் கண் பார்க்கும் பிதா அவள்
எல்லோரும் விரும்பும் மான் குட்டி அவள்
எங்கள் இராஜியத்தின் இராணி மகாராணி - அவள்
கரம் பற்றும் மணவாளன் பாக்கியவான் ஆவான்.
விள்ளாலன் அவன் அந்த ரகு குல நாதன்
பொய்யேதும் பேசாத ஹரிச்சந்திர இராஜன்
உலகமே விரும்பும் அந்த ஒப்பற்ற சந்திரன்
எங்கள் பொன்னான கண்ணை கொண்டாட இந்த
மண் மீது வந்தான் அவன் ராஜாதி ராஜன்.
மணப்பெண் தோழிகள் அவள் சிருங்காரம் சீர் செய்ய
மணவாளர் எங்கே என்று உள்ளத்தை கேலி செய்ய
உற்றார் உறவினர் அவள் அலங்காரம் பார்த்து மெச்ச
தங்கள் கண்ணான செல்வி இன்று திருமதியாய் மாற
தந்தையும் தாயும் தெய்வ சிந்தையில் ஆழ்ந்தனர்.
மூவெட்டு வருடமாய் என்னுடன் வளர்ந்தவள்
புது உலகம் குடி புகும் முதல் நாள் இன்றே
பெயரிட்டு அழைத்தே பழக்கம் கொண்டவள்
அண்ணா என்றழைத்த முதல் நாளும் இன்றே
பட்டு உடை உடுத்தி, பொன்னில் நகை அணிந்து
கண்ணில் சிறு வெட்கம் கொண்ட முதல் நாளும் இன்றே
கண்ணாளர் துணை நிற்க, கண்ஓரம் சிறுதுளி நின்று
எல்லூரும் அகம் மகிழ்ந்த பொன்னாலும் இன்றே
மண்னோரும் விண்ணோரும் எங்கள் முன்னோரும் முன்னின்று
சிறப்பிக்க செய்த மணநாளும் இன்றே
இந்த நன்னாளை கொண்டாட வெண்மேகம் கூடி
பூமாரி பொழிந்த திரு நாளும் இன்றே..

No comments:
Post a Comment